There were 1,132 press releases posted in the last 24 hours and 391,462 in the last 365 days.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் முறையீட்டு சுயாதீன ஆணைக்குழுவின் அறிக்கை

LOS ANGELOUS, UNITED STATES, May 3, 2024 /EINPresswire.com/ -- நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமைத் தேர்தல் ஆணையம் தேர்தல் முறையீட்டைக் கேட்க மூன்று பேர் கொண்ட சுயாதீன ஆணைக்குழு ஒன்றை சமீபத்தில் நியமித்துள்ளது.

இந்த குழுவின் உறுப்பினர்கள் பின்வருமாறு:

1) திரு அனான் பொன்னம்பலம்.
(முன்னாள் அமெரிக் தேர்தல் ஆணையாளர்)
2) Dr அருள் ரஞ்சிதன்.
3) சத்தியவாணி கோகுலரமணன்.

இந்த ஆணைக்குழு முறையாக, முழுமையாக, உரிய காலத்தில், செய்யப்பட்ட தேர்தல் முறையீட்டு விண்ணப்பங்களை முழுமையாக பரிசீலித்த பின்னர் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.

முதற்கண் தேர்தல் ஆணைக்குழு கள் தங்கள் முடிவின் காரணத்தை விளக்கும் முழுமையான அறிக்கையை சமர்பித்தமைக்கு நன்றி தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையாளர்கள் அனுப்பிய விபரமான அறிக்கையை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் கையேட்டுடனும், நாடுகடந்த அரசாங்கத்தின் அரசியல் அமைப்பையும் முழுமையாகப் பரிசீலித்தது.

ஆணையாளர்கள் மூவரும் முறையீடுகளைப்பரிசீலித்து கீழ்வரும் தேர்தல் விண்ணப்பங்கள் நிராகரித்தமையை மீளப்பெற்று அந்தந்த
தொகுதிகளில் மட்டும் எதிர்வரும் 12/05/2024 ஞாயிற்றுக்கிழமை தேர்தலை நடாத்தும்படி பரிந்துரைத்துள்ளது.

வரும் ஞாயிற்றுக்கிழமை 05/05/2024 இல் ஐந்து தொகுகளில் நடைபெற இருக்கும் தேர்தல்களை எந்த இடையூறும் இன்றி முழுமையாக நடாத்தும்படி வேண்டியுள்ளது.

நிராகரிக்கப்பட்ட வேட்பாளர்களில் போட்டியிடத் தகுதி உள்ள வேட்பாளர்களின் விபரம் கீழ்வருமாறு.

1) திரு மகாஜெயம் மகாலிங்கம்.

2) திரு நிமல் விநாயகமூர்த்தி.

3) திரு டேவிட் தோமஸ்.

4) சிவமோகன் சிவலிங்கம்.

5) திரு எரிக் சேவியர்.

6) திரு சபாநாதன் கதிரமலை.

7) திரு சந்திரகுமார் சாண் கிருஷனசாமி.

8) அன்பரசி கொளரி ஐயாத்துரை.

9) திரு ரவீந்திரன் இராசநாயகம்.

10) திரு சந்திரகுமார் இராமகிருஷணா.

நன்றி :
தேர்தல் முறையீட்டு ஆணைக்குழு
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.

Anan Ponnampalam
WN
email us here
Visit us on social media:
Facebook
Twitter
Instagram